| ADDED : ஏப் 17, 2024 11:50 PM
புதுச்சேரி : சிறையில் உள்ள ரவுடிகள் மிரட்டுவதாக எழுந்த புகார் எதிரொலியால், காலாப்பட்டு சிறையில் நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். புதுச்சேரி லோக்சபா தேர்தலில் சில தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளை, சிறையில் உள்ள ரவுடிகள் தொடர்பு கொண்டு மிரட்டி கட்சி பணி செய்ய கூடாது, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு தேர்தல் பணி செய்ய வேண்டும் என, மிரட்டுவதாக புகார் எழுந்தது.இதைத் தொடர்ந்து, புதுச்சேரி ரவுடிகள் தடுப்பு பிரிவு எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கணேஷ், கண்ணன், சப்இன்ஸ்பெக்டர்கள் குமார், சிவபிரகாசம், சந்தோஷ் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மதியம் 1:00 மணிக்கு காலாப்பட்டு மத்திய சிறைக்குள் நுழைந்தனர். அங்கு விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளை சோதனை செய்தனர். சோதனையில் எதுவும் கிடைக்காததால் வெறும் கையுடன் போலீசார் திரும்பிச் சென்றனர்.