உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீசார் - பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம்

போலீசார் - பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம்

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில் இருளர் குடியிருப்பான அமட்டன்குளத்தில் போலீசார்- பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் நடந்தது. சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வரவேற்றார். சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், குழந்தை திருமண தடைச் சட்டம், போக்சோ, குழந்தை தொழிலாளர் சட்டம் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.தொடர்ந்து மாணவர்கள், வருங்காலங்களில் நன்கு படித்து போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிகளில் சேருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை