உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலித்தீன் கம்பெனி நடத்தியவர் தற்கொலை

பாலித்தீன் கம்பெனி நடத்தியவர் தற்கொலை

புதுச்சேரி: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்தவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.முத்தரையர்பாளையம் அசோகன் வீதியை சேர்ந்தவர் தமிழரசன், 41; பாலித்தீன் கம்பெனி நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த 6 மாதங்களாக தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அவர், சில மாதங்களாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசாமல் அதிகமாக மது குடித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை