உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொன்முடி மீதான குவாரி வழக்கு பல்டி சாட்சி 22 ஆக உயர்வு

பொன்முடி மீதான குவாரி வழக்கு பல்டி சாட்சி 22 ஆக உயர்வு

விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையில் நேற்று, மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்தார்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அனுமதியை மீறி செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 அரசு தரப்பு சாட்சிகளில் நேற்று முன்தினம்வரை 25 பேர் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 21 பேர் பிறழ் சாட்சி அளித்தனர்.நேற்று நடந்த விசாரணையில், 26வது சாட்சியான அப்போதைய வி.அகரம் வி.ஏ.ஓ.,வும் தற்போதைய விழுப்புரம் - கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உதவி இயக்குனரான மோகன், உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதன் பேரில், கோப்புகளில் கையெழுத்திட்டேன். எனக்கும் இவ்வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை' என பிறழ் சாட்சியம் அளித்தார்.அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பூர்ணிமா, விசாரணையை நாளை (இன்று) ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

என்றும் இந்தியன்
ஏப் 24, 2024 17:31

இந்த பதவியில் இருக்கணுமா இல்லையா சொல்லுங்க??சாட்சி சொன்னால் உன் பதவி காலி - இப்படிக்கு திமுக ஆகவே தான் இந்த பிறழ் சாட்சி


Raj
ஏப் 24, 2024 15:33

வருடமாக பேரை தான் விசாரித்துள்ளார்கள் மீதம் பேரை விசாரிப்பதற்கு வருடங்கள் ஆகும் அப்பொழுது பொன்முடிக்கு வயசு ஆகும் இருந்தால் பார்க்கலாம்


Selvaraj
ஏப் 24, 2024 10:14

If no penal action is taken against those who dont agree to their earlier witness, all others will also fall in line with them?


Selvaraj
ஏப் 24, 2024 10:09

இருபத்திரண்டு சாக்ஷி கள் மட்டும் அல்ல இவர் வழக்கில் அனைத்து சாக்ஷிகளும் பிறழ் சாக்ஷிகளாக மாறக்கூடும் இப்படி பிறழ் சாக்ஷியம் அளித்த ஒரு சிலர் மீதாவது பொய் சாக்ஷி அளித்ததற்கு நீதிமன்றம் உரிய தண்டனை அறிவித்திருந்தால் பிறழ் சாக்ஷியம் அளிப்பவர்கள் உணரக் கூடும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை