உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கம்பங்கள் சாய்ந்து 18 மணி நேரம் பவர் கட்

மின் கம்பங்கள் சாய்ந்து 18 மணி நேரம் பவர் கட்

அரியாங்குப்பம், : அபிேஷகப்பாக்கத்தில் பெய்த மழையில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் 18 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.புதுச்சேரியில் மழை காலம் தொடங்குவதற்கு முன்பே விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதில், தவளக்குப்பம் பகுதிகளில் மரங்கள் வேறோடு சாய்ந்தது. அதனால், மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. மின் துறையினர் விரைவாக சீர் செய்து 24 மணி நேரத்திற்கு பின் மின்சாரம் வழங்கப்பட்டது.நேற்று முன்தினம் இரவு 8:00 மணியவில் அபிேஷகப்பாக்கம் பகுதியில் திடீர் மழை பெய்தது. அப்பகுதியில் இருந்த இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. தகவலறிந்த சபாநாயகர் செல்வம் நேரில் பார்வையிட்டு, சேதமான மின் கம்பங்களை விரைந்து சீர் செய்ய வலியுறுத்தினார்.அதையடுத்து, மின் துறை இளநிலை பொறியாளர் திருமுருகன் மற்றும் ஊழியர்கள், புதிய மின் கம்பங்கள் அமைத்து சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இதனால், அப்பகுதியில் 18 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை