| ADDED : மார் 29, 2024 04:45 AM
புதுச்சேரி: காரைக்காலில் இருந்து கோயம்புத்துாருக்கு, பி.ஆர்.டி.சி., புதிய பேருந்து இன்று முதல் இயக்கப்படுகிறது. காரைக்காலில், பொதுமக்கள் வசதிக்கு, 2 பிளஸ் 2 இருக்கைகளுடன், புதிய 'செமி' டீலக்ஸ் பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து சேவை இன்று முதல் துவங்குகிறது. இந்தப் பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய இடங்களில், பேருந்தை நிறுத்தி, பயணிகளை ஏற்றி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, கோயம்புத்துாரில் இருந்து பேருந்து புறப்படும் போது காந்திபுரம், சிங்காநல்லுார், சூலுார், பல்லடம் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்டு, பயணிகள் ஏற்றி செல்லப்பட உள்ளனர். இதற்கான முன்பதிவு கட்டணம், ரூ.475. இதில் பயணம் செய்ய, www.prtc.in, வலைதளத்திலும், 'பஸ் இந்தியா ஆப்' முன்பதிவு செய்யலாம்.