மேலும் செய்திகள்
போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
9 hour(s) ago
முருங்கை, முந்திரி சாகுபடி மதிப்பு கூட்டுதல் பயிற்சி
9 hour(s) ago
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை, நுாறு நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு நிலவியது.அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட அரியாங்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த நுாறு நாள் வேலை செய்யும் தொழிலாளிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் அரியாங்குப்பம் பி.டி.ஓ., அலுவலகத்தில் திரண்டனர். திடீரென அவர்கள் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர். அதில், லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், அரியாங்குப்பம், தவளக்குப்பம், மணவெளி, ஓடைவெளி, நல்லவாடு, ஆண்டியார்பாளையம், அபிேஷகப்பாக்கம், டி.என்., பாளையம், நோணாங்குப்பம் ஆகிய பகுதியில் நுாறு நாள் வேலை இன்னும் துவங்காமல் உள்ளது. உடனடியாக வேலையை துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
9 hour(s) ago
9 hour(s) ago