புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா வித்யாஷரம் உறைவிடப் பள்ளி சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.தேர்வு எழுதிய 500 மாணவர்களும் உயர் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் கார்த்திகேயன் 493; கமலேஷ்வர் 488; டோரா பிரசில்லா மெடா 487 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மூன்றிடங்களை பிடித்தனர்.கணிதத்தில் 8 பேர், தமிழில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். பாட வாரியாக மொழிப் பாடத்தில் 226 பேர், ஆங்கிலத்தில் 145 பேர், கணிதத்தில் 145 பேர், அறிவியலில் 76 பேர், சமூக அறிவியலில் 65 பேர் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர்.உயர் சிறப்பு வகுப்பில் 311 பேர், 480 மதிப்பெண்களுக்கு மேல் 15 பேர், 475க்கு மேல் 18 பேர், 450க்கு மேல் 91 பேர், 400க்கு மேல் 246 பேர், மேலும், 60 - 74 சதவீதத்திற்குள் 140 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.அவர்களை, பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்ய நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் பாராட்டினர். பள்ளி முதல்வர், இயக்குனர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.பள்ளி நிறுவனர் ஆனந்தன் கூறுகையில், 'ஆதித்யா கல்வி குழுமத்தில் அகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவம், பொறியியல், வர்த்தகம், பட்டய கணக்காளர், ஐ.ஏ.எஸ்., ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 6ம் வகுப்பு முதல் கற்பிக்கப்பட்டு வருகிறது ' என்றார்.