| ADDED : ஜூன் 23, 2024 05:14 AM
கொலை, கொள்ளைகளை துப்பு துலக்குவதில் இந்தியாவிலேயே புதுச்சேரி போலீஸ் தான் தற்போது நெம்பர் ஒன் இடத்தில் உள்ளனர். இருந்தாலும்அடையாளம் தெரியாத சடலத்தைகண்டாலே புதுச்சேரியில் ஏட்டையா முதல் சப் இன்ஸ்பெக்டர்கள் வரை அலறி வருகின்றனர்.அடையாளம் தெரியாத சடலத்தை அடக்கம் செய்யவும், யார் என கண்டுபிடிக்கவும் போலீஸ் துறையில் நையா பைசா கிடைக்காதது தான் இதற்கு முக்கிய காரணம். அடையாளம் தெரியாத சடலத்தை ஆம்புலன்ஸ் கொண்டு வந்து எடுப்பதிலிருந்து அடக்கம் செய்வது வரை 1,200 ரூபாய் சொந்த கை காசு கொண்டு செலவு செய்ய வேண்டி இருப்பதால், அடையாளம் தெரியாத சடலம் வந்தாலே அன்று பூராவும் போலீஸ் ஸ்டேஷனில் இன்றைக்கு நேரம் சரியா இல்லை; யார் முகத்தில் விழித்தேனோ என்று புலம்பி வருகின்றனர் புதுச்சேரி போலீசார்.யாராவது புகார் கொடுக்க வந்தால், அவர்கள் தலையில அடக்க செலவை கட்டிவிடுவதியிலேயே குறியாக உள்ளனர்.