உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டாபிராமர் கோவிலில் ராம நவமி

பட்டாபிராமர் கோவிலில் ராம நவமி

பாகூர் : பாகூர் அடுத்த மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் கோவிலில் ராம நவமி உற்சவம் நேற்று நடந்தது.இதையொட்டி, காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், காலை 10:30 மணிக்கு சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 8:00 மணிக்கு அனுமன் வாகனத்தில் ராமர் எழுந்தருளி வீதியுலா சென்று அருள்பாலித்தார். முன்னதாக காலை அனுமன், கருடாழ்வார் வாகனங்களின் கரிக்கோல வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி