உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில்  ராமாயண சொற்பொழிவு

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில்  ராமாயண சொற்பொழிவு

புதுச்சேரி, : முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ராமாயண சிறப்பு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ராமபிரான் அவதரித்த நாளே ராம நவமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிலையான வெற்றியும் நீடித்த செல்வமும் நிலைக்க வேண்டும் என்பதே இவ்விழாவின் முக்கிய வேண்டுதலாக அமைந்துள்ளது.உலகம் முழுவதும் வரும் 17 ம்தேதி ராம நவமி கொண்டாடப்பட உள்ள சூழ்நிலையில் முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் இன்று 15ம் தேதி முதல் 17 ம்தேதி வரை மூன்று நாட்களுக்கு ராமாயணம் குறித்து சிறப்பு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடக்கும் இந்த சொற்பொழிவில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் சொற்பொழிவாற்றுகிறார்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை