உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரேஷன் கடை ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

ரேஷன் கடை ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

புதுச்சேரி : காலாப்பட்டு கடற்கரை கிராமங்களை ஒருங்கிணைத்து சாலை அமைக்க வேண்டும் என, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசினார்.பட்ஜெட் உரை குறித்த விவாதத்தில் அவர், பேசியதாவது:'என் வீடு என் நலம் திட்டம்' வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டம், பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இதனை அனைத்து தொகுதிக்கும் கிடைக்கும் வகையில் பரவலாக வழங்க வேண்டும். பள்ளி வளாகத்தில் காய்கறி மற்றும் சத்துணவு தோட்டம் அமைக்க ஒரு சதுர அடிக்கு ரூ. 2.50 என்ற அடிப்படையில் பள்ளி ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 10,000- வழங்கும் திட்டம். இது மாணவர்களிடையே விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும். நடப்பு நிதியாண்டு முதல் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகிய உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதனை ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் ரேஷன் கடைகளே இல்லை. எனவே புதிய ரேஷன் கடைகளை ஏற்படுத்தி, ஊழியர்களுக்கான பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். காலாப்பட்டில் கடலோர காவல் நிலையம் அமைக்க வேண்டும். கனகசெட்டிக்குளம் முதல் பிள்ளைச்சாவடி வரை 4 மீனவ கிராமங்களை ஒன்றிணைக்க கடற்கரையோரம் ஒரு சாலை அமைக்க வேண்டும். இது சுற்றுலாவை மேம்படுத்தும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ