மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
புதுச்சேரி: ரேஷன் கடை திறப்பு குறித்து அறிவிப்பு இல்லாதது முதல்வருக்கும் கவர்னருக்கு இடையே உள்ள முரண்பாட்டை காட்டுகிறது என, சம்பத் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் பெரும்பாலான மக்கள் ரேஷன் கடையை அரசு திறப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. முதல்வரும் ரேஷன் கடை திறக்கப்படும் அரிசியுடன் பருப்பு, பாமாயிலும் சேர்த்து வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். புதுச்சேரியையொட்டிய தமிழக பகுதியில் உள்ள தமிழக ரேஷன் கடைகளை பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்ததார்.ஆனால் கவர்னர் உரையில் இது குறித்து அறிவிப்பு இல்லாதது ரேஷன் கடைகளை திறக்கப்படாது என்பதை காட்டுகிறது. ரேஷன் கடைகளை திறக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து அறிவிப்பு கவர்னர் அறிக்கையில் இல்லாதது அரசிற்கும் கவனருக்கு ஒருங்கிணைப்பும் ஒத்த கருத்தும் இல்லாததை காட்டுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago