உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

புதுச்சேரி : நடைபாதையை ஆக்கிரமித்து புதிதாக கட்டப்பட்டு இருந்த கடையை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.புதுச்சேரி, மகாத்மா காந்தி வீதி - அரவிந்தர் கோவில் வீதி சந்திப்பில் பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து புதிதாக டீக்கடை அமைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக புதுச்சேரி நகராட்சிக்கு புகார் எழுந்ததை தொடர்ந்து, கடைகாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் கடையை அகற்றாத நிலையில், நேற்று நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக டீக்கடையை ஜே.சி.பி., கொண்டு அகற்றினர். நாளுக்கு நாள் நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்து வருகின்றன. குறிப்பாக செட்டித்தெரு, வைசியாள் வீதி, சின்னசுப்பிராயப்பிள்ளை வீதி, உள்ளிட்ட பல்வேறு நகர வீதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகளை எழுப்பப்பட்டுள்ளது.இவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் சென்றாலும் பின்னணியில் அரசியல்வாதிகள் குறுக்கிடுகின்றனர். இதன் காரணமாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடியவில்லை. ஏற்கனவே வாரவிடுமுறையில் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பிக்கின்றன. ஆக்கிரமிப்பு கடைகளால் சாலைகள், நடைபாதைகள் மேலும் குறுகி, வாகனமே ஓட்ட முடியாத அளவிற்கு மாறி வருகின்றன.ஆக்கிரமிப்புகளை முளையிலேயே அகற்றாவிட்டால், அடுத்து மின் இணைப்பு எல்லாம் பெற்று, பக்கா கடைகளாகிவிடும். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற புதிய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை