உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கனுாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருக்கனுாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருக்கனுார்: திருக்கனுார் பஜார் வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. திருக்கனுார் பஜார் வீதியின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட கடைகள், ஒயின் ஷாப், மெடிக்கல், கிளினிக், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த கடைகளின் முன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மற்றும் சாலை ஆக்கிரப்புகளால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.இதையடுத்து, வில்லியனுார் சப் கலெக்டர் உத்தரவின் பேரில், பொதுப்பணித் துறை சாலை பிரிவு, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் திருக்கனுார் பஜார் வீதியின் புதுச்சேரி மாநிலத்திற்கு சொந்தமான பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சீனிவாச ராம், இளநிலைப் பொறியாளர் தேவேந்திரன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகா அர்ஜூனன் மற்றும் ஊழியர்கள் போலீசார் உதவியுடன் ஈடுபட்டனர். இதில், கடைகளின் விளம்பர பெயர் பலகை, சிமெண்ட் சிலாப் மற்றும் மேல்தள ஆக்கிரமிப்பு கூரைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ