| ADDED : ஜூன் 14, 2024 05:56 AM
புதுச்சேரி: இளநிலை பொறியாளர் புதிய நியமன விதியை மறு ஆய்வு செய்ய அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர்பதவிக்கான புதிய நியமன விதியை கடந்த ஆண்டு நவ., 28ம் தேதி அரசு வெளியட்டது. அதில் இளநிலை பொறியாளர் பதவிக்கு தகுதிகளோடு காத்திருக்கும் வரைவாளர், மேற்பார்வையாளர், பணி உதவியாளர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இளநிலை பொறியாளர் பதவிக்கான புதிய நியமன விதியில் 85 சதவீதம் நேரடி நியமனம், 10 சதவீதம் பதவி உயர்வு மூலம் வரைவாளர்களுக்கும், மீதி, 5 சதவீதம் போட்டி தேர்வு மூலம் குறைந்த பணி காலம் உள்ள வரைவாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.புதிய நியமன விதியில் கடந்த 32 ஆண்டுகளாக இளநிலை பொறியாளர் பதவிக்கு மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டு உரிமைகள், அவர்களின் கருத்தை கேட்காமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டில் இருந்து உதவியாளராக பணிபுரிந்து வருபவர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவியில் தகுந்த ஒதுக்கீடு வழங்கப்படும் என, நீதிமன்றத்தில் பொதுப்பணித் துறை வாக்குறுதி வழங்கியும் நிறைவேற்றவில்லை. வரைவாளர்களுக்கும் தகுந்த ஒதுக்கீடு வழங்காமல் குறைக்கப்பட்டுள்ளது. நெறிமுறைகளை மீறி திருத்தப்பட்டுள்ள இளநிலை பொறியாளர் புதிய நியமன விதியை மறு ஆய்வி செய்ய வேண்டும். இப்பிரச்னையில் முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சர் தலையிட்டு முடிவு காண வேண்டும்.