உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொலை செய்யப்பட்ட முதியவருக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

கொலை செய்யப்பட்ட முதியவருக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

அரியாங்குப்பம்: கரும்பால் அடித்து கொலை செய்யப்பட்ட முதியவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என, பழங்குடியினர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்ட விழாவில், சிதம்பரம் அடுத்த கீரப்பாளைம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளிமலை, 60, என்பவர் கோவில் அருகே சாமி வேடம் அணிந்து, பொதுமக்களிடம் காணிக்கை வாங்கினார்.காணிக்கை பணம் தர மறுத்த வெள்ளிமலையை வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்,27; என்பவர் கரும்பினால், அடித்ததில் அவர் உயிரிழந்தார்.வெள்ளிமலை பழங்குடியின பிரிவில், நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர். அவரது உறவினர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் தலைவர் ஏகாம்பரம், அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட முதியவரின் உடலை வாங்க மறுத்தனர். மேலும், இந்த வழக்கை எஸ்.சி., - எஸ்.டி., பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, புதுச்சேரி, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை