உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு அறிவித்த திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டுகோள்

அரசு அறிவித்த திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டுகோள்

புதுச்சேரி: விளையாட்டு திட்ட பணிகளை மறு ஆய்வு கூட்டம் நடத்தி விரைவுப்படுத்த வேண்டும் என, ரமேஷ் எம்.எல்.ஏ., பேசினார்.பட்ஜெட் மானிய கோரிக்கையின்போது அவர், பேசியதாவது:முதல்வர் ரங்கசாமி அனைத்து தரப்பினருக்கான சிறந்த பட்ஜெட்டினை தாக்கல் செய்துள்ளார். கடந்தாண்டு, பொதுப்பணித்துறை மூலம் தொகுதியில் செய்ய வேண்டிய பட்டியலை அரசு கேட்டது. அதன்படி இந்தாண்டு எம்.எல்.ஏக்களிடம் பொதுப்பணித் துறை பட்டியலை பெற்று பணிகளை செய்து கொடுக்க வேண்டும்.முதல்வர் எப்போதுமே சொல்வதை செய்பவர். பிளஸ் 2 முடித்தவர்களும் லேப்டாப் கேட்கின்றனர். அவர்களுக்கு பணமாக தரப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார்.அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இது முதல்வரால் சாத்தியம். மாநிலம் முழுதும் விளையாட்டுகளில் இளைஞர்கள், மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் விளையாட்டு துறைக்கு கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 8 கோடி செலவிடப்படாமல் திருப்பப்பட்டது. இந்தாண்டு இத்துறையில் ஒதுக்கப்பட்ட நிதி, அதற்கான பணிகள் குறித்து மறு ஆய்வு கூட்டம் நடத்தி, பணிகளை வேகப்படுத்தி முடிக்க வேண்டும்.முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் சிறப்பான திட்டங்களை அறிவித்துள்ளார். இதனால் மாநில வளர்ச்சி விரைவாக எட்டும். இருப்பினும் இது அதிகாரிகள் கையில் தான் இருக்கிறது. நிதி, திட்ட அறிக்கை என இழுத்தடிக்காமல் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை