உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வருவாய்த்துறை சிறப்பு முகாம் 19,193 சான்றிதழ்கள் வழங்கல்

வருவாய்த்துறை சிறப்பு முகாம் 19,193 சான்றிதழ்கள் வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த சிறப்பு முகாம்களில், 19 ஆயிரத்து 193 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் குலோத் துங்கன் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் சந்திக்கும் சிரமங்களை நீக்கும் வகையில், வருவாய்த்துறை கடந்த மே மாதம், 13ம் தேதி முதல் 24ம் தேதி வரை மாணவர்கள் உள்ளூரிலேயே, சான்றிதழ் பெறும் வசதியை ஏற்படுத்த சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை பள்ளிகளில் நடத்தி உள்ளது.புதுச்சேரி மாவட்டம் முழுதும், 37 இடங்களில், இரு வாரங்களாக, இந்த முகாம்கள் விண்ணப்ப தாரர்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் விண்ணப்பதாரர்கள், நீண்ட வரிசையில் நிற்பது தடுக்கப்பட்டது. மேலும், தாலுகா அலுவலகங்களில், மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டது.இந்த முகாம்களின் போது, சான்றிதழ்களை விரைவாக வழங்க, தாலுகாக்களில் பணிபுரியும் சான்றிதழ் வழங்கும் துணை தாசில்தார்களுக்கு கூடுதலாக, 8 துணை தாசில்தார்கள் நியமிக்கப்பட்டனர்.இந்த முகாம்களில் மொத்தம், 19 ஆயிரத்து 378 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 19 ஆயிரத்து 193 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, 40 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.சான்றிதழ்களை பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால், விண்ணப்பதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை, அனைத்து ஆவண சான்றுகளுடன் சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தின் வட்டாட்சியர் அல்லது சார் ஆட்சியர், (வருவாய்) தெற்கு, வில்லியனுார் அல்லது துணை ஆட்சியர் (வருவாய்) - வடக்கு, புதுச்சேரி ஆகியோரை அணுகலாம்.அனைத்து ஆவண சான்று களுடன், புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக, தொடர்ந்து வசித்ததற்கான சான்றுகளுடன் அணுக வேண்டும். சாதி சான்றிதழுக்கு விண்ணப்பதாரர் அல்லது அவரது பெற்றோர் அல்லது தாத்தா - பாட்டி, புதுச்சேரியில் பூர்வீகமாக வசித்ததற்கான, சான்றுகளுடன், அதாவது அட்டவணை இனத்தவர் எனில், கடந்த 1964ம், ஆண்டு, மார்ச் 5ம் தேதிக்கு முன்பும், பிற்படுத்தப்பட்ட இனத்தவர் எனில், கடந்த, 2001ம் ஆண்டு, பிப்., 19ம் தேதிக்கு முன்பு வசித்ததற்கான, சான்றுகளுடன் அணுகி சான்றிதழை பெற்று கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி