உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரிசிக்கு பணம் வந்தது! காஸ் மானியம் எப்போது?

அரிசிக்கு பணம் வந்தது! காஸ் மானியம் எப்போது?

லோக்சபா தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட, இரண்டு மாத இலவச அரிசிக்கான பணம் 33 கோடி ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.புதுச்சேரி மாநிலத்தில் ஒற்றை அவியல் அரிசி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரிசிக்கு பதில் பணமாக பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக, ஏப்ரல் மாதம் முதல் இலவச அரிசிக்கான பணம் வழங்கப்படவில்லை.இந்நிலையில், தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களுக்கு இலவச அரிசிக்கான பணம் 33 கோடியை குடிமை பொருள் வழங்கல் துறை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேற்று அனுப்பியது. இதன் மூலமாக, 3.50 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 600 ரூபாய் வீதம் இரு மாதத்திற்கு 1,200 ரூபாயும், மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 300 ரூபாய் வீதம் இரு மாதத்திற்கு 600 ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது.

காஸ் மானியம் எப்போது?

சமையல் எரிவாயு மானியமாக சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 300 ரூபாயும், மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 150 ரூபாயும் வழங்கும் திட்டத்தையும் புதுச்சேரி அரசு செயல்படுத்தி வருகிறது.இத்திட்டமும், தேர்தல் நன்னடத்தை விதியின் காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. 1.75 லட்சம் பேர் சிலிண்டர் வைத்துள்ளனர். இவர்களுக்கு எரிவாயு மானியத்தை வழங்குவதற்கு 2.75 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. எனவே, சமையல் காஸ் மானியம் வழங்குவதற்கான பணிகளையும், குடிமை பொருள் வழங்கல் துறை முடுக்கி விட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி