உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்

சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்

பாகூர்: பாகூர் ஏரிக்கரை அம்பேத்கர் சிலை அருகே சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். பாகூர் ஏரிக்கரையில் உள்ள போர்வெல் மூலமாக கிருமாம்பாக்கம் பகுதிக்கு 6 இன்ச் குழாய் மூலமாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது, குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், புதியதாக 12 இன்ச் குழாய் மூலமாக குடிநீர் கொண்டு செல்ல குழாய் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.அதில், பாகூர் ஏரிக்கரை அம்பேத்கர் சிலை சதுக்கம் வழியாக சென்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தின் புதைவட கேபிள் துண்டிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட நிறுவனம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் பள்ளம் தோண்டி பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள்ஈடுபட்டனர்.ஆனால், பணிகள் முடிவடையாத நிலையில், சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் அப்படியே உள்ளது.அவ்வழியாக செல்லும் பொது மக்கள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். ஏதேனும் பெரிய அளவில் அசம்பாவிதம் நேரிடும் முன்பாக, சாலை பள்ளத்தைமுறையாக சீரமைத்திட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ