உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீச்சரிவாளுடன் ரவுடி கைது

வீச்சரிவாளுடன் ரவுடி கைது

புதுச்சேரி: வீச்சாரிவாள் வைத்து மறைந்திருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிர்னேஸ்வரி மற்றும் போலீசார் கூடப்பாக்கம் பகுதியில் நேற்று இரவுரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் அவர் அங்கிருந்து தப்ப ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த ரவுடி அன்பரசன்,35; எனவும், அவரை சோதனை செய்ததில் அவரிடம் வீச்சரிவாள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அன்பரசனை போலீசார் கைது செய்து வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை