உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

புதுச்சேரி: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை வீதியில், வாலிபர் ஒருவர் அவ்வழியே செல்வோரை கத்தியை காட்டி மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் விரைந்து சென்று, பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்த கருவடிக்குப்பத்தை சேர்ந்த ரவுடி ஆட்டோ மணி (எ) மணிகண்டன், 26; கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.மணிகண்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது இரட்டை கொலை, வெடிகுண்டு வீச்சு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை