உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ருக்மணி கல்யாண சங்கீத உபன்யாசம்

ருக்மணி கல்யாண சங்கீத உபன்யாசம்

புதுச்சேரி: எல்லைப்பிள்ளைசாவடியில், விசாகாவின் 'ருக்மணி கல்யாண சங்கீத உபன்யாசம்' நாளை நடக்கிறது.புதுச்சேரி, ஸ்ரீ கிருஷ்ண பிரேமிக மண்டலி சார்பில், எல்லைப்பிள்ளை சாவடி, சாரதாம்பாள் கோவிலில், ஸ்ரீமத் பாகவத உபன்யாசம், கடந்த, 8ம் தேதியில் இருந்து ஸ்ரீஹரியால் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி நாளை நடக்க உள்ளது. அன்றைய தினம்,காலை 8:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை, உஞ்ச விருத்தி, திவ்ய நாமம் மற்றும் ஸ்ரீ ராதா கல்யாண மகோற்சவம் நடைபெறுகிறது.மேலும், இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை, ருக்மணி கல்யாணம் சங்கீத உபன்யாசம், விசாகாவால் நிகழ்த்தப்பட உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ