உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் கோவிலில் குங்கும காப்பு அலங்காரம்

காரைக்கால் கோவிலில் குங்கும காப்பு அலங்காரம்

காரைக்கால்: காரைக்கால் மகா மாரியம்மன் குங்கும காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காரைக்கால் கடைதெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் 44ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு திருவிழா கடந்த 13ம் தேதி பூச்செரிதலுடன் துவக்கியது.விழாவின் 6ம் நாள் மகா மாரியம்மனுக்கு நேற்று முன்தினம் குங்கும காப்பு அலங்காரம் நடந்தது. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெண்கள் குத்துவிளக்கை அம்மனாக பாவித்து குங்குமம் இட்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ