வேதபாரதி சார்பில் 9ம் தேதி சமஷ்டி உபநயனம்
புதுச்சேரி; வேதபாரதி சார்பில் வரும் மார்ச் 9ம் தேதி, சமஷ்டி உபநயனம் நடக்கிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாட்டின் பாரம்பரிய பண்பாடு, கலாசாரத்தை காக்கும் பணியை, கடந்த 7 ஆண்டுகளாக வேதபாரதி செய்து வருகிறது. அடுத்த தலைமுறையினர், நெறி சார்ந்த பாதையில் செல்லவும், பாரம்பரிய கலாசாரத்தை அறிந்து கொள்ள, மாணவர்களை ஒருங்கிணைத்து, மார்கழி பஜனை, உலக நன்மை வேண்டி ராதா மாதவ திருக்கல்யாணத்தை நடத்தி வருகிறது.இந்நிலையில், வேத பாரதி சார்பில், குரோதி சமஷ்டி உபநயனம் நிகழ்வு, வரும் மார்ச் 9ம் தேதி, புதுச்சேரி வழுதாவூர் சாலை, தருமாபுரியில் உள்ள சங்கமம் திருமண நிலையத்தில் நடக்கிறது. 7 வயது நிரம்பிய அந்தண சிறுவர்கள், முன்பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு 94434 95950, 98426 07476 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.