உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுகாதார ஊழியர் சம்மேளனம் போராட்டம்

சுகாதார ஊழியர் சம்மேளனம் போராட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து காலியிடங்களை நிரப்ப வேண்டும், விடுப்பட்ட நோயாளிகள் கவனிப்புப்படி, நர்சிங் அலவன்ஸ் நிலுவை தொகையை வழங்க வேண்டும், பணியின்போது உயிரிழந்த ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.போராட்டத்திற்கு, புதுச்சேரி அரசு சுகாதார ஊழியர் சம்மேளன தலைவர் தில்லைகோவிந்தன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அருள்முருகன் விளக்கவுரையாற்றினார். கவுரவத் தலைவர் கலைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராசன், புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை