உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராயம் கடத்தினால் கடும் நடவடிக்கைமேற்கு பகுதி எஸ்.பி., எச்சரிக்கை

சாராயம் கடத்தினால் கடும் நடவடிக்கைமேற்கு பகுதி எஸ்.பி., எச்சரிக்கை

வில்லியனுார்: வில்லியனுார் பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு சாராயம் கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கடை உரிமையாளர்களுக்கு எஸ்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேற்கு எஸ்.பி., எல்லைக்கு உட்பட்ட வில்லியனுார், மங்கலம், திருக்கனுார், திருபுவனை, நெட்டப்பாக்கம் மற்றும் காட்டேரிக்குப்பம் பகுதியில் உள்ள சாராயக்கடை உரிமையாளர்களை அழைத்து எஸ்.பி., வம்சிதரெட்டி ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் எனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து ஒரு சொட்டு சாராயம் தமிழக பகுதிக்கு கடத்தக்கூடாது. அரசு குறிப்பிட்டுள்ள நேரத்தை தாண்டி விற்பனை செய்ய கூடாது. மொத்தமாகவோ, அதிக அளவிலோ ஒருவருக்கு சாராயம் விற்பனை செய்யக்கூடாது. கள்ளத்தனமாக சாராயம் விற்பனை செய்து, யாருடைய சாவுக்காவது காரணமாக இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு விதிமுறைகளை மீறும் கடை உரிமையாளர்கள் மீது குண்டார் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும். சாராய விற்பனை சம்பந்தமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என போலீசாரையும் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ராஜ்குமார, கீரத்திவரமன், சப் -இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, தமிழரசன் மற்றும் சாராயக்கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

கடை உரிமையாள்கள்

அவமதிப்புஅரசுக்கு கோடிகணக்கில் வருவாய் ஏற்படுத்தி கொடுக்கும் சாராயக்கடை உரிமையாளர்களை எஸ்.பி., அலுவலகத்திற்கு அழைத்து, அவர்கள் அமர்வதற்கு இருக்கை போடாமல் குற்றவாளிகளை போன்று நிற்கவைத்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ