| ADDED : ஆக 22, 2024 12:58 AM
வில்லியனுார் : புதுச்சேரி கல்வித்துறை சார்பில், தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவியர் தேர்வு நடந்தது.புதுச்சேரி அரசு கல்வித்துறையின் சார்பில் 68வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யும் பணி வில்லியனுார் ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியில் நடந்தது.புதுச்சேரி கல்வித்துறை உடற்கல்வி இணை இயக்குனர் வைத்தியநாதன் தேர்வு முகாமை துவக்கி வைத்தார். விரிவுரையாளர் மணி மற்றும் திட்ட பொறுப்பாளர் சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். தேர்வு முகாமில் பொறுப்பாளர் பழனி, தேர்வு முறைகள் குறித்து பேசினார்.புதுச்சேரியை சேர்ந்த தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட் மாணவ மாணவியர் பங்கேற்றனர். 14 வயது மற்றும் 17 வயது பிரிவுகளில் மாணவ மாணவிக்கான தேர்வு நடந்தது.உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயந்தி, வரதராஜன், செந்தில், சரவணன், ஜெய்ஸ், பிரபாகரன், வேலவன், ஆதிகேசவன், திருமாவளவன், குமரேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் 62 ஹாக்கி வீரர்களை தேர்வு செய்தனர். உடற்கல்வி ஆசிரியர் ரகு நன்றி கூறினார்.