மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த இரண்டாம் நாள் கம்பன் விழாவில், ஏராளமானோர் உற்சாகமாக பங்கேற்றனர்.புதுச்சேரி கம்பன் விழாவில், நேற்று, காலை கம்பன் இசையமுது நிகழ்ச்சியை, சிவதாசன் வழங்கினார். இளையோர் அரங்கில், பழனி அடைக்கலம், சுகுமாறன், வீரபாலாஜி, கவி நிலவன், தங்கமுத்து, ரோஷினி பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 'இந்திரஜித்தின் போர்முறை அறமற்றது' எனும் தலைப்பில், 'இலங்கை' ஜெயராஜ் நடுவராக பங்கேற்ற, வழக்காடு மன்றம் நடந்தது. சச்சிதானந்தம் முன்னிலை வகிக்க, மாது மற்றும் சண்முக வடிவேல் பங்கேற்றனர்.மாலையில் 'கம்பன் இசையமுது' நிகழ்ச்சியை, முகுந்தன் வழங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி சிறப்புரையாற்றினார். கங்கை மணிமாறன் தலைமையில், 'அறம் காத்த கம்பன்' எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.நெல்லை ஜெயந்தா, கல்பாக்கம் ரேவதி மற்றும் மலர்மகள் பங்கேற்றனர். இளம்பிறை மணிமாறன் நடுவராக பங்கேற்ற, 'நீதியை நிலை நாட்ட நின்ற பாத்திரம்' எனும் தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது. ராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.பட்டிமன்றத்தில் பிரியா ராமச்சந்திரன், வேல்முருகன், பாரதி, இளங்கோ, வாசுதேவா, சிதம்பரம், விசாலாட்சி, நீலம் அருட்செல்வி உமா சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago