உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெஞ்சு வலியால் செக்யூரிட்டி சாவு

நெஞ்சு வலியால் செக்யூரிட்டி சாவு

புதுச்சேரி : மேட்டுப்பாளையத்தில் தனியார் நிறுவன செக்யூரிட்டி நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.புதுக்கோட்டையை சேர்ந்தவர் சோலையப்பன், 53; மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக பணியாற்றினார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, சோலையப்பன் நெஞ்சு எரிச்சல் மற்றும் வலி உள்ளதாக கூறி அமர்ந்துவிட்டார்.சக செக்யூரிட்டிகள் ஆட்டோ மூலம் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், வரும் வழியிலே இறந்து விட்டது தெரிந்தது.மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை