உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவ கல்லுாரிக்கு பேராசிரியர்கள் தேர்வு 

அரசு மருத்துவ கல்லுாரிக்கு பேராசிரியர்கள் தேர்வு 

புதுச்சேரி: அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு கடந்த மாதம் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்தது.இதில், தேர்வானவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியல் விவரங்களை கல்லுாரியின் இயக்குனர் உதய சங்கர் வெளியிட்டுள்ளார்.அதன்படி, பேராசிரியர்கள் பணிக்கு தும்ஜா, மதன், ஸ்ரீனிவாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 35 பேரும், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கு 3 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ