உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்கை லைன் எஸ்டேட் புதிய மனை பிரிவு முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு

ஸ்கை லைன் எஸ்டேட் புதிய மனை பிரிவு முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு

புதுச்சேரி : ஓம்சக்தி ரியல் ஏஜென்சி, ஜெனோமாறன் நிறுவனம் இணைந்து, புதுச்சேரி வில்லியனுார் அடுத்த அரியூர் பகுதியில் ஸ்கை லைன் எஸ்டேட் எனும் பெயரில் புதிய மனைப்பிரிவு துவக்கப் பட்டுள்ளது.இதன் துவக்க விழா நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி மனை விற்பனையை துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஆறுமுகம், வெங்கடேசன், ராமலிங்கம், பா.ஜ., முன்னாள் தலைவர் சாமிநாதன், பா.ம.க., மாநில தலைவர் கணபதி, தொழிலதிபர்கள், வியாபாரிகள் பங்கேற்றனர். திரளான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு மனை முன்பதிவு செய்தனர்.ஓம்சக்தி குழும தலைவர் ஓம்சக்தி சேகர், ஜெனோமாறன் நிறுவன தலைவர் தங்க மணிமாறன் வரவேற்றனர். ஓம்சக்தி தமிழ் செங்கோலன், ஓம்சக்தி கவியரசன் நன்றி கூறினர்.சுற்றுச்சுவர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், 22 ஏக்கரில் மனைபிரிவு அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கான மனை, வில்லா பிளாட், கமர்ஷியல் பிளாட், அப்பார்ட்மெண்ட் என அனைத்து தரப்பினரும் வீடு கட்டுவதற்கான பிளாட்கள் உள்ளன.ஒவ்வொரு பிளாட்டிற்கும் தனித்தனி குடிநீர் வசதி, தரமான சிமென்ட் சாலைகள், 50 அடி அகல பிரதான சாலைகள் இந்த நகரின் சிறப்பு அம்சமாகும். அனைத்து தெருக்களுக்கும் பெயர் பலகை வைக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் மனைகளை சுற்றி பார்க்க பேட்டரி கார் வசதி செய்யப்பட்டுள்ளது.உடனடியாக வீடு கட்டுவதற்கான அனைத்து அம்சங்களும் உள்ள இந்நகரில், இன்று (6ம் தேதி) முதல் மனைக்கான முன்பதிவு நடக்கிறது. மனை பிரிவில் நிரந்தர அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை