மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
17 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
17 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் பூர்வீக குடியுரிமை பெற்றவர்களே தேர்தலில் போட்டியிட முடியும், என சமூக நீதி பேரவை தெரிவித்துள்ளது.சமூக நீதி பேரவை நிறுவனர், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தலைவர் தனராமன், செயலாளர் கீதநாதன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.அவர்கள் கூறியதாவது: புதுச்சேரியில் பிரெஞ்ச் குடியுரிமை ஆணையை முழுமையாக அமல் படுத்த வேண்டும். பூர்வீக குடியுரிமை பெற்றவர்களே, லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியும். அவர்களது வாரிசுகள் தான் போட்டியிட முடியும். இது சட்ட வரையறையில் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.இதற்கான ஆவணங்களுடன், புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி, லோக்சபா தேர்தல் நடத்தும் அதிகாரி, சட்டத்துறை செயலாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர் எனில், தகுதி இழக்க செய்கின்ற சட்ட வரையறையை, தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்வோம்; ஆட்சேபனை செய்வோம்.ஏனெனில் புதுச்சேரி குடியுரிமை ஆணையை போல் கோவா மாநிலத்திற்கும், சிக்கிம் மாநிலத்திற்கும் மட்டும் தான் குடியுரிமை ஆணை சட்டம் இந்தியாவில் உள்ளது. இந்த சட்ட நடைமுறையை அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்வோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago