மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
6 hour(s) ago
புதுச்சேரி: தவளக்குப்பம் பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லுாரியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி தாளாளர் அக்ரி கணேஷ் தலைமை தாங்கி, கல்லுாரியில் உள்ள பண்ணையில் காய்கறி விதைகளை விதைத்து ஆடிப்பெருக்கின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள் ஏற்படுத்தியுள்ள பல பயிர் திட்டமிடல், ஊட்டச்சத்து தோட்டம் ஆகியவற்றில் மாணவர்கள் விதைகளை விதைத்தனர்.இந்த ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதிதாக மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் நுண்ணிய கீரை வளர்ப்பு பற்றிய செய்முறை பயிற்சி மற்றும் விழிப்புணர்வுகள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நுண்ணிய கீரை வளர்ப்பிற்கான பயிற்சி வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கல்லுாரி உதவி பேராசிரியர்கள் காரல் மார்க்ஸ், மணிகண்டன், வினிதா, பவித்ரா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago