உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் சிறப்பு பயிற்சி முகாம்

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் சிறப்பு பயிற்சி முகாம்

புதுச்சேரி: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் செயல்படுகின்ற பொது சேவைகள் மையத்தின் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.புதுச்சேரி, காரைக்காலில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் செயல்படுகின்ற பொது சேவைகள் மையத்தின் ஊழியர்களுக்கு மத்திய அரசின் கூட்டுறவு துறையின் மூலம் ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.புதுச்சேரி கூட்டுறவு வங்கி தலைமை அலுவகத்தின் நடந்த முகாமை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா துவக்கி வைத்தார். துணை பதிவாளர் சாரங்கபாணி, புதுச்சேரி கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.பொது சேவை மையத்தில் வழங்படும் சேவைகளுக்குறிய பல்வேறு பயிற்சியினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு, மாவட்ட மேலாளர் பாவேந்தன், உதவி மேலாளர் இளந்திரையன் வழங்கினர்.நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி