உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சீனியர், ஜூனியர் எஸ்.ஐ.,கள் உரசல்

சீனியர், ஜூனியர் எஸ்.ஐ.,கள் உரசல்

புதுச்சேரி போலீசில் பதவி உயர்வு கடந்த காலத்தில் 15 வருடம் பணி முடித்தவருக்கு ஏட்டு, 25 ஆண்டு கடந்தவருக்கு உதவி சப் இன்ஸ்பெக்டர், 35, ஆண்டுகள் பணியில் இருந்தால் தான் சப்இன்ஸ்பெக்டர் பதவி கிடைக்கும். இதனை கடந்த மார்ச் மாதம் புதுச்சேரி உள்துறை மாற்றி அமைத்தது.10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு ஏட்டு, 15 ஆண்டு பணியாற்றியவர்களுக்கு உதவி சப்இன்ஸ்பெக்டர், 25 ஆண்டு பணியாற்றியவர்களுக்கு சப்இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதன் மூலம் 2,000க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு பெற்றனர்.புதிதாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ஐ.களுக்கும், 35 ஆண்டுகள் பணியாற்றிய சீனியர் எஸ்.ஐ.களுக்கும் இடையே போலீஸ் நிலையங்களில் நடக்கும் உரசல் தீப்பற்றி ஏரிகிறது. நிலைய பொறுப்பாளராக உள்ள சீனியர் எஸ்.ஐ., வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினாலும், புதிதாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ஐ.கள் இடையில் புகுந்து விசாரித்து முடித்து விடுகின்றனர்.இது தொடர்பாக பிரச்னை எழுந்தால், நானும் எஸ்.ஐ., தான் என மார்தட்டுகின்றனர். பல போலீஸ் நிலையங்களில் சீனியர் ஜூனியர் எஸ்.ஐ.,களுக்குள் நடக்கும் உரசல்களை அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் சமரசம் செய்து வைக்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு, 35 ஆண்டு பணி முடித்த எஸ்.ஐ.க்களுக்கு, சிறப்பு நிலை இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை