உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி

பாகூர் : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், ஆண்கள் பிரிவில் புல்ஸ் அணியும், பெண்கள் பிரிவில், மேஜிக் பேஸ்கட்பால் அணியும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.கிராமப்புறங்களில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், புதுச்சேரி கூடைப்பந்து கழகம், மேஜிக் கூடைபந்து சங்கம், ரவுண்ட் டேபுள் 104 அமைப்பு சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, பாகூர் தொகுதிகுட்பட்ட குருவிநத்தம் கிராமத்தில் ராமநாதன் கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது.நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 28 ஆண்கள் அணியும், 4 பெண்கள் அணியும் பங்கேற்று தங்களது திறைமைகளை வெளிப்படுத்தினர்.ஆண்கள் பிரிவில் புல்ஸ் அணி 73 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் மேஜிக் பேஸ்கட்பால் அணி 49 புள்ளிகள் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றன. செந்தில்குமார் எம்.எல்.ஏ., வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். ரவுண்ட் டேபிள் 104 அமைப்பு தலைவர் விக்னேஷ்வரன், மேஜிக் கூடைபந்து சங்க தலைவர் அமித், புதுச்சேரி கூடைப்பந்து கழக நிர்வாகிகள் ரகோத்தமன், முகுந்தன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ