உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்வி இடஒதுக்கீடு கோரி போராட்டம்

கல்வி இடஒதுக்கீடு கோரி போராட்டம்

வில்லியனுார்: கரிக்கலாம்பாக்கத்தில் பழங்குடியின மாணவர்கள் கல்வி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதியில் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் இலவச கல்வி இட ஒதுக்கீட்டில் 30 ஆண்டு காலமாக புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், இட ஒதுக்கீடு கேட்டு கரிக்கலாம்பாக்கத்தில் விவசாய வயல்வெளியில் இறங்கி பிச்சை கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் இட ஒதுக்கீடு கோரி கவர்னர், முதல்வருக்கு கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பினர். ஏம்பலம் தொகுதியை சேர்ந்த பழங்குடியின அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ