உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடலில் மூழ்கி மாணவர் பலி புதுச்சத்திரம் அருகே சோகம்

கடலில் மூழ்கி மாணவர் பலி புதுச்சத்திரம் அருகே சோகம்

புதுச்சத்திரம் : கடலில் குளித்த கல்லுாரி மாணவர் அலையில் சிக்கி இறந்தார். கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த மஞ்சக்குழியை சேர்ந்தவர் சங்கர் மகன் அன்பரசன்,22; கடலுார் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து சாமியார்பேட்டை கடலில் குளித்தார்.அப்போது, அன்பரசன் ராட்சத அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அருகில் இருந்த நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்ட மீனவர்கள், கடலில் இறங்கி அலையில் சிக்கிய அன்பரசனை தேடினர். சிறிது நேரத்தில் அவரை சடலமாக மீட்டனர்.இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி