மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 5வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.பள்ளியில் 175 மாணவர்கள் எழுதி, அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி பிரியதர்ஷினி 494 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 5ம் இடமும், பள்ளி அளவில் முதலிடத்தையும், ஜெயவர்ஷினி 493 பெற்று 2ம் இடத்தையும், ஹரிணி மற்றும் வினோதினி 492 பெற்று 3ம் இடத்தையும் பிடித்தனர்.பள்ளி அளவில் 475 மதிப்பெண்களுக்கு மேல் 28 பேரும், 450க்கு மேல் 33 பேரும், 400க்கு மேல் 55 பேரும், 350க்கு மேல் 34 பேரும், 300க்கு மேல் 21 பேரும் பெற்றுள்ளனர்.பாடவாரியாக தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 2 பேர், கணிதத்தில் 19 பேர், அறிவியலில் ஒருவர், சமூக அறிவியலில் 2 பேர், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.சாதனை படைத்த மாணவிகளை பள்ளி முதல்வர் சம்பத், துணை முதல்வர் சுசிலா சம்பத் ஆகியோர் பாராட்டினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பள்ளி 35 ஆண்டுகளாக கல்விப் பணியை சிறப்பாக செய்து வருகிறது. 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது. பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., ( என்.சி.இ.ஆர்.டி) பாடத்திட்டம் பின்பற்றபடுகிறது. என்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago