உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பால் கறவை இயந்திரம் வழங்கல்

பால் கறவை இயந்திரம் வழங்கல்

நெட்டப்பாக்கம் : கால்நடை நலம் மற்றும் பராமரிப்புத் துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கறவை மாடு பயனாளிகளுக்கு பால் கறவை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கரியமாணிக்கம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கால்நடை பாரமரிப்பு துறை இயக்குனர் லதா மங்கேஸ்வர் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் குமரன், கால்நடை மருத்துவர் சிவசங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை சபாநாயகர் ராஜவேலு கறவை மாடு பயனாளிகளுக்கு பால் கறவை இயந்திரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ