உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனைத்து பள்ளிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை

அனைத்து பள்ளிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி: 'அனைத்து பள்ளிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கட்டாயம் பாட வேண்டும்' என, தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத் பேசினார்.சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அவர், பேசியதாவது:புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து, புதுச்சேரியில் பிறந்த கவிஞர் பாரதிதாசன் எழுதிய 'இசை அமுது' என்னும் பாடல் தொகுப்பின் இரண்டாம் பகுதியின் முதல் பாடலான 'வாழ்வின் செம்மையை செய்பவள் நீயே மான் புகழ் நீயே என் தமிழ் தாயே' எனத் துவங்கும் பாடலை புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்துள்ளோம்.இந்தப் பாடல் அனைத்தும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். அரசு விழாக்களில் இந்தப் பாடல் ஒலிக்கப்பட்ட பின்பு தான் நிகழ்ச்சி துவங்குகிறது. அதை போல் அனைத்து பள்ளிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், பள்ளி துவங்கும் முன் பாடப்பட வேண்டும். ஆனால் பல தனியார் பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது இல்லை. இப்படியே சென்றால் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து எது, என்பது கூட தெரியாமல் போய்விடும். எனவே, வரும் காலங்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலையில் கூடும் இறைவணக்க கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று அரசாணை இயற்ற வேண்டும். இதை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, சம்பத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை