மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
புதுச்சேரி : கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் அருகே கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபம் அருகே வாலிபர் ஒருவர் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் அன்வர் பாட்ஷா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர், 11வது குறுக்கு தெருவை சேர்ந்த பெலிக்ஸ் ராபின்சன், 37; என்பதும், அவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதும் தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago