உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க மனு அங்காளன் எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி

ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க மனு அங்காளன் எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி

புதுச்சேரி : முதலியார், கருணீகர் சமூகத்தை மத்திய ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க கோரி தேசிய பிற்படுத்தபட்டோர் ஆணைய தலைவரிடம் மனு கொடுத்த அங்களான் எம்.எல்.ஏ.,வுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர்.புதுச்சேரியில், முதலியார், கருணீகர் சமூகத்தை மத்திய ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் என, அங்காளன் எம்.எல்.ஏ., தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் கன்ஸ்ராஜ் கங்கராம் அகியோரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், புதுச்சேரியில், முதலியார், கருணீகர் சமுதாயத்தினர் பொது பட்டியலில் இருந்து வருகிறது. அவற்றை பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார். கோரிக்கை விடுத்த அங்காளன் எம்.எல்.ஏ., வுக்கு, முதலியார், கருணீகர் சங்கத்தை சேர்ந்த நடன சபாபதி, செந்தில்குமார், முத்துக்குமரன், சந்திரசேகர், சங்கர், கோபி, சுந்தரமூர்த்தி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி