உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு தடுப்பணைகள் நிரம்பியது

செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு தடுப்பணைகள் நிரம்பியது

திருக்கனுார்: செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை, தொடர் கனமழை காரணமாக நிரம்பி வழிகிறது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு - திருவக்கரை சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு மூலம் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, தற்போது முழுதும் நிரம்பி வழிந்து வருகிறது. இதேபோல், கூனிச்சம்பட்டு- மணலிப்பட்டு இடையே கட்டப்பட்டுள்ள தடுப்பணையும் நிரம்பியுள்ளது.நிரம்பி வழிந்து வரும் தண்ணீரில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பருவ மழைக்கு முன்பாகவே தடுப்பணை நிரம்பியுள்ளதால், கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரம் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, தடுப்பணை நிரம்பியுள்ளதால், ஆற்றின் இருகரை களையும், கனமழை துவங்குவதற்கு முன்பாக மண் கொட்டி பலப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை