மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
2 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
2 hour(s) ago
காரைக்கால்: திருமண வரவேற்புக்கு தயாராக இருந்த மணமகனை காணவில்லை என மணமகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.காரைக்கால் தோமாஸ் அருள் வீதியை சேர்ந்த நெப்போலியன் மகள் லீனா கத்ரின், 31; இவர் கடந்த 12ஆண்டுகளாக கும்பகோணம் தென்னுார்ச் சேர்ந்த கலையரசன், 32; என்பவரை காதலித்து வந்துள்ளனர். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனியாக கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த மாதம் 22ம் தேதி இருவரும் திருமணம் செய்துள்ளனர்.இந்நிலையில் வரும் 23ம் தேதி திருமண வரவேற்பு வைப்பதற்கு கலையரசன், லீனா கத்ரின் ஆகியோர் முடிவு எடுத்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் கலையரசனை தொடர்புகொண்ட போது அவர் செல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் லீனா கத்ரின் பல இடங்களில் தேடியும் கலையரசன் காணவில்லை.லீனா கத்தின் புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் வழக்குப் பதிந்து மாயமான கலையரசனை தேடிவருகின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago