உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது முதலிடம் பெற்ற மாணவி மகிழ்ச்சி

கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது முதலிடம் பெற்ற மாணவி மகிழ்ச்சி

புதுச்சேரி : லாஸ்பேட்டையில் உள்ள புனித சூசையப்பர் குளுனி மேனிலைப்பள்ளி பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.இப்பள்ளியில் வணிக வியல் பிரிவு மாணவி ஸ்ரேயா மதன்ராஜ் 600 மதிப்பெண்ணிற்கு 597 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.அதிக மதிப்பெண் எடுத்து சாதித்த மாணவி ஸ்ரேயாவை பள்ளி முதல்வர் ரோசிலி சால்வை அணிவித்து பாராட்டினார்.மேலும் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஸ்ரேயா 597, ஸ்ரீவித்யா 592, அஸ்வதா 589, மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தியும் மலர்க்கொத்து வழங்கியும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் ஆசிரியர்களும் தங்களுடைய வாழ்த்துகளையும் பாராட்டு தெரிவித்தனர்.பள்ளி மாணவி ஸ்ரேயா மதன்ராஜ் கூறும்போது, மாநில அளவில் அதிக மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்துள்ள மகிழ்ச்சியாக உள்ளது. கடினமாக உழைத்தேன். அதன் பலன் மாநில அளவில் சிறப்பு நிலையில் கிடைத்துள்ளது.அடுத்து இளநிலையில் பி.காம்., மேல்நிலையில் எம்.பி.ஏ., எடுத்து படிப்பேன். பள்ளி கல்வியை போன்று உயர்கல்வியையும் கடினமாக திட்டமிட்டு படித்து வாழ்வில் சாதிப்பேன். படிப்பிற்கு மட்டுமின்றி, விளையாட்டிற்கும் சம முக்கியத்து வம் கொடுத்து தான் படித்தேன். எந்நேரமும் படித்துக் கொண்டு படித்துக் கொண்டு இருக்கவில்லை. படிக்கின்ற நேரத்தில் கவனத்தை சிதற விடாமல் படித்தாலேயே போதும், அதிக மதிப்பெண் பெறலாம்.என்னுடைய வெற்றிக்கு அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பக்கபலமாக இருந்தனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை