உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... பிரெஞ்சு போர் சினைவுச் சின்னம்

அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... பிரெஞ்சு போர் சினைவுச் சின்னம்

புதுச்சேரி கடற்கரை சாலையில் மிடுக்கான ராணுவ சீருடையுடன், கவிழ்ந்த துப்பாக்கியுடன் ராணுவ வீரர் அஞ்சலி செலுத்தும் வரலாற்று சிறப்புமிக்க இடத்தின் பெயர், பிரெஞ்சு போர் நினைவு சின்னம். இதன் வரலாற்று பின்னணி கனமானது. இந்த போர் சின்னம், பல போர்களில் பங்கேற்ற புதுச்சேரி வீரர்களின் வீரத்தை பறைசாற்றுகிறது.முதலாம் உலக போரின்போது, புதுச்சேரியை சேர்ந்த 800 பேர் சைகோனில் ராணுவ பயிற்சி பெற்று பிரான்ஸ், அதன் நேச நாடுகளுக்காக பல்வேறு போர்முனைகளுக்கு அனுப்பப்பட்டனர். உலக போர் 1919ல் முடிவுக்கு வந்தபோது, புதுச்சேரி வீரர்கள் 75 பேர் உயிரிழந்தனர். அவர்கள் எந்த மத சடங்கும் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டனர்.வெவ்வேறு நாடுகளில் புதைக்கப்பட்ட அவர்களின் வீரத்தை போற்றும் வகையில் பிரான்ஸ் நாடு, கடந்த 1937ல், புதுச்சேரியில் போர் நினைவுச் சின்னம் கட்ட முடிவு செய்து, 5 ஆயிரம் ரூபாயை ஒதுக்கியது. தெ லா போன் என்ற கட்டட வடிவமைப்பாளர், போர் சின்னத்தை வடிவமைத்து கட்டினார். கடந்த 1938ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதியன்று, பிரெஞ்சு அரசின் புதுச்சேரி கவர்னராக இருந்த குரோசிக்கியா திறந்து வைத்தார்.இதேபோல், இரண்டாம் உலக போரிலும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் தெகோலின் ராணுவத்தில் சேர்த்து, 1945ல் பிரான்சை மீட்டனர். இந்தோ சீனா, அல்ஜீரியா போர்களிலும் பலர் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் வீரத்தை போற்றும் வகையில், 1971ல் பழைய சின்ன வடிவிலேயே புதிய போர் சின்னம் புனரமைக்கப்பட்டு, 1971ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதியன்று திறந்து வைக்கப்பட்டது.இரண்டு உலக போர்கள், அல்ஜீரியா போர்களில் பங்கேற்ற புதுச்சேரி வீரர்களின் பெயர்கள் போர் நினைவுச் சின்னத்தில் இடம் பெற்றுள்ளது. இதேபோல் ஒரு கல்வெட்டில் இந்தோ சீனா போரில் உயிர் நீத்த புதுச்சேரி வீரர்களின் பெயர் பட்டியலும் பொறிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் 1918ல் முதல் உலக போர் முடிந்து, அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நவம்பர் 11ம் தேதி போர் வீரர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை