மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
15 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
15 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
15 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
15 hour(s) ago
புதுச்சேரி, ' புதுச்சேரியின் புதிய கவர்னர் கைலாசநாதன் 2ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.புதுச்சேரிக்கு புதிய கவர்னராக கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். பயோடேட்டா
கவர்னராக நியமிக்கப்பட்ட கைலாசநாதன் கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரை பகுதியை சேர்ந்தவர்.1953ம் ஆண்டு மே மாதம், 25ம் தேதி பிறந்தவர்.சென்னை பல்கலையில் எம்.எஸ்.சி., வேதியியல், வேல்ஸ் பல்கலையில், எம்.ஏ., பொருளாதாரம் படித்தவர். இவரது தந்தை அஞ்சல்துறையில் தமிழகத்தின் ஊட்டியில் பணிபுரிந்தார். அதனால் அவர் அந்த பகுதியில் தான் வளர்ந்தார்.கடந்த, 1979ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பேட்ச் அதிகாரியான கைலாசநாதன், குஜராத்தில் கடந்த, 1981ம் ஆண்டில், உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து கலெக்டர் உள்ளிட்ட, பல்வேறு பதவிகளில் பணியாற்றிய இவர், பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தபோது, கடந்த, 2013-14ம் ஆண்டில்,முதன்மை தலைமை செயலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றார்.ஓய்விற்கு பின்னரும் கடந்த ஜூன் மாதம் வரை, கைலாசநாதன் முதன்மை செயலாளராக தொடர்ந்து பணியாற்றினார். புதுச்சேரியின் பொறுப்பு கவர்னராக இருந்த ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கைலாசநாதன் புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை கூட்டத் தொடர்
புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் கவர்னர் ராதாகிருஷ்ணன் உரையாற்றுவார் என, அறிவிக்கப்பட்டது.இதனிடையே புதுச்சேரி கவர்னர் பொறுப்பினை கூடுதலாக கவனித்து வந்த ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநில கவர்னராக மாற்றப்பட்டார்.இதனால், சட்டசபை கூட்டத் தொடரில் தற்போதைய கவர்னர் ராதாகிருஷ்ணன் உரையாற்றுவாரா அல்லது புதிய கவர்னர் பொறுப்பேற்று, அவருடைய உரையுடன் சட்டசபை கூட்ட தொடர் துவங்குமா என்ற கேள்வி எழுந்தது.இருப்பினும் வரும் 31ம் தேதி வரை புதுச்சேரி கவர்னராக ராதாகிருஷ்ணன் பதவியில் இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.அவர் 31ம் தேதி சட்டசபை கூட்டத் தொடரில் காலையில், உரையாற்றிவிட்டு அன்று மாலை மகாராஷ்ட்டிரா கவர்னராக பொறுப்பேற்க உள்ளார். 2ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அன்று மாலை புதிய கவர்னர் கைலாசநாதன் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago